ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 8:23 PM IST (Updated: 17 Aug 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு, மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். 

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆட்டோ தொழிலாளர்களுக்கு மீண்டும் தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். அதேபோல் பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும். கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.


இதுபோல பழனி பஸ் நிலைய ரவுண்டானா அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் பிச்சமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story