ரூ.13 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


ரூ.13 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 17 Aug 2021 8:30 PM IST (Updated: 17 Aug 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே ரூ.13 லட்சத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

பழனி :


பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்வாதம்பட்டியில் மாவட்ட கவுன்சிலர் நிதியின் மூலம் ரூ.13 லட்சத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது.


 இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கி சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். னார். ஒன்றிய குழு உறுப்பினர் சுலோச்சனா சோமு, முன்னாள் ஊராட்சி தலைவர் சிவசங்கர், அரசு ஒப்பந்ததாரர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story