பட்டுக்கோட்டையில் 3 வயது சிறுமி 1 மணி 18 நிமிடங்களில் 9.8 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை


பட்டுக்கோட்டையில் 3 வயது சிறுமி 1 மணி 18 நிமிடங்களில் 9.8 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை
x
தினத்தந்தி 17 Aug 2021 9:06 PM IST (Updated: 17 Aug 2021 9:06 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் 3 வயது சிறுமி 1 மணி 18 நிமிடங்களில் 9.8 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்தார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் கருப்பசாமி- ரூபினி தம்பதியினரின் 3 வயது மகள் தீபாஸ்ரீ 9.8 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 18 நிமிடங்களில் ஓடி சாதனை படைத்தார். கொரோனா விழிப்புணர்வுக்காக இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது. சிறுமி தீபாஸ்ரீ, பட்டுக்கோட்டை பஸ் நிலையம் பெரியார் சிலையில் இருந்து தனது ஓட்டத்தை தொடங்கினார். இதை இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் நிறுவனர் மகேந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக டாக்டர் சதாசிவம் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்.

தீபாஸ்ரீயின் தொடர் ஓட்டம் பழனியப்பன் தெரு, தலையாரி தெரு, அறந்தாங்கி ரோடு, தஞ்சை சாலை புறவழிச்சாலை வழியாக பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் நிறைவடைந்தது.

சிறுமி தீபாஸ்ரீயின் தொடர் ஓட்டத்தை நோபல் உலக சாதனை நடுவர்கள் அரவிந்த், ஜெயப்பிரதா, வினோத் ஆகியோர் இரு சக்கர வாகனங்களில் சென்று கண்காணித்தனர். சிறுமியை வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் நின்று பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர். மணிக்கூண்டு பகுதியில் பயிற்சியாளர் ஷீலா முன்னிலையில் சிறுமி தீபாஸ்ரீ தனது உலக சாதனை ஓட்டத்தை நிறைவு செய்தார். 9.8 கிலோ மீட்டர் தூரத்தை 3 வயது சிறுமி தீபாஸ்ரீ 1 மணி நேரம் 18 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்ததை பாராட்டி முன்னாள் நகர சபை தலைவர் ஜவகர்பாபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயலட்சுமி சாம்பசிவம் ஆகியோர் முன்னிலையில் நடுவர்கள் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினர்.

Next Story