விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது


விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Aug 2021 9:31 PM IST (Updated: 17 Aug 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


விழுப்புரம், 

3 பேர் சிக்கினர்

விழுப்புரம் பாண்டியன் நகரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். பின்னர் அந்த காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

கார், நகை பறிமுதல்

விசாரணையில் அவர்கள் 3 பேரும் திருநெல்வேலி மாவட்டம் திருகுருன்குடியை சேர்ந்த சுரேஷ் (வயது 31), கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தாஸ் (38), ராஜதுரை (29) என்பதும், இவர்கள் 3 பேரும் விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கார் மற்றும் 10 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story