கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Aug 2021 9:38 PM IST (Updated: 17 Aug 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காட்பாடி

காட்பாடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். 

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 
இந்த தனிப்படை போலீசார் காட்பாடி பகுதியில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது பள்ளிகுப்பம் ெரயில்வேகேட் அருகே மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். 

அதில் அவரிடம் ஒரு பார்சல் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

 அதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் காட்பாடி, கரசமங்கலம், மோட்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்புராஜ் (வயது 25) என்பது தெரியவந்தது. 

மேலும் அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து வேலூர், காட்பாடி பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து கஞ்சா, மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story