கிருஷ்ணகிரியில் தங்கும் விடுதியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


கிருஷ்ணகிரியில் தங்கும் விடுதியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Aug 2021 10:00 PM IST (Updated: 17 Aug 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் தங்கும் விடுதியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் தங்கும் விடுதியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தங்கும் விடுதி
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தனது பெயர் தயாளன் (வயது 30) என்றும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், வேலை விஷயமாக வந்ததாக கூறி அறை எடுத்து தங்கினார்.
இந்த நிலையில் அவர் அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அறை கதவை உடைத்து பார்த்த போது தயாளன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
குடும்ப தகராறு
போலீசார் நடத்திய விசாரணையில் தயாளன் கார் டிரைவர் என்பதும், நண்பரை பார்க்க கிருஷ்ணகிரி செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் குடும்ப தகராறு காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story