தொப்பூர் கணவாயில் தடுப்பு சுவரில் லாரி மோதி டிரைவர் காயம்


தொப்பூர் கணவாயில் தடுப்பு சுவரில் லாரி மோதி டிரைவர் காயம்
x
தினத்தந்தி 17 Aug 2021 10:00 PM IST (Updated: 17 Aug 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் தடுப்பு சுவரில் லாரி மோதி டிரைவர் காயம் அடைந்தார்.

நல்லம்பள்ளி:
பெங்களூருவில் இருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் வழியாக கோவை நோக்கி நேற்று விடியற்காலை வந்து கொண்டு இருந்தது. இந்த. லாரியை கம்பைநல்லூர் அருகே உள்ள மிட்டப்பள்ளியை சேர்ந்த டிரைவர் மோகன் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story