ரூ.1¾ கோடி கோவில் நிலம் மீட்பு


ரூ.1¾ கோடி கோவில் நிலம் மீட்பு
x
ரூ.1¾ கோடி கோவில் நிலம் மீட்பு
தினத்தந்தி 17 Aug 2021 10:21 PM IST (Updated: 17 Aug 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

ரூ.1¾ கோடி கோவில் நிலம் மீட்பு

கோவை

கோவை உப்பார வீதியில் பேட்டை விசுவேசுவரர் கோவிலுக்கு சொந்தமான 265 சதுடி அடி நிலத்தில் ஆக்கிரமித்து வணிக கட்டிடம் இருந்தது. இதேபோல் பெரியகடை வீதியில் லட்சுமி நாராயண வேணுகோபால சாமி கோவிலுக்கு சொந்தமாக 1060 சதுரஅடி பரப்பில் இரண்டு வணிக கட்டிடங்களும் இருந்தன.

இந்த கட்டித்தில் இருந்தவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.எனவே கோவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு கோவில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் செந்தில் வேலவன் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி, தெற்கு தாசில்தார் புனிதவதி ஆகியோர் முன்னிலையில் பெரியகடை வீதி போலீசாரின் பாதுகாப்புடன் அங்கு விரைந்து சென்றனர். 

பின்னர்  பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1¾ கோடி ஆகும்.இதுபோன்று ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு மீட்பு நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story