திருப்பூரில் 12 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

திருப்பூரில் 12 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
x
தினத்தந்தி 17 Aug 2021 10:49 PM IST (Updated: 17 Aug 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் 12 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

திருப்பூர்,:
திருப்பூரில் 12 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் குடிமைப்பொருள் பறக்கும்படை அதிகாரிகள் இணைந்து கடந்த மாதம் 22-ந் தேதி முருகம்பாளையம் பாறக்காடு பகுதியில் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அங்கிருந்து மொத்தம் 12 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 20), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கருப்புசாமி (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். சூர்யா முருகம்பாளையத்திலும், கருப்புசாமி இடுவம்பாளையத்திலும் தங்கியிருந்து ரேஷன் அரிசியை பெற்று பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேர் மீதும்   போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
 குண்டர் சட்டம்
சூர்யா, கருப்புசாமி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் உள்ள சூர்யா, கருப்புசாமி 2 பேரிடம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினார்கள்.
 திருப்பூர் மாநகரில் இதுவரை 39 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story