சாராயம் விற்ற 3 பேர் கைது


சாராயம் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Aug 2021 10:51 PM IST (Updated: 17 Aug 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் பிரம்மதேசம் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்அலி தலைமையிலான போலீசார் தியாகராஜபுரம் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீ்ட்டின் பின்புறம் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த சரஸ்வதி (வயது 32), ஏரிக்கரை அருகே சாராயம் விற்ற முருகன்(40) ஆகியோரை கைது செய்த போலீசார் இருவரிடம் இருந்தும் தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் எண்டியூர் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த அதேஊரை சேர்ந்த குப்பன் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது


Next Story