குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தில் கரடி புகுந்தது
கோத்தகிரி பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தில் புகுந்த கரடியால் தூய்மை பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தில் புகுந்த கரடியால் தூய்மை பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
குப்பைகள் தரம் பிரிக்கும் மையம்
கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரத்தில் அமைந்துள்ளது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் இந்த பூங்காவில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம், இயற்கை உரம் தயாரிக்கும் மையம், குப்பைகளை இயற்கை உரமாக மறுசுழற்சி செய்ய பயன்படும் எந்திரங்கள், மக்காத குப்பைகளை எரிக்கும் எந்திரம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோத்தகிரியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா வளாகத்திற்குள் கரடி ஒன்று நடமாடி வருகிறது. மேலும் அந்த கரடி குப்பைகள் எரிக்க சமீபத்தில் அமைக்கப்பட்ட எந்திரம் அமைக்கப்பட்டுள்ள பகுதியிலும், குப்பைகளை மறு சுழற்சி செய்ய அடுக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளில் இருந்த வீணான உணவுப் பொருட்களை தின்றுவிட்டு அருகிலிருந்த குடியிருப்பு பகுதிக்குள் சென்று அங்கும் நடமாடி வருகிறது.
கரடி புகுந்தது
நேற்று காலை குப்பைகளை தரம் பிரிக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யும் மையத்திற்குள் கரடி புகுந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அங்கு நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:- கோத்தகிரி பகுதியில் கடந்த சில தினங்களாக கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடைந்து உள்ளார்கள்.
மேலும் இன்று (நேற்று) அந்த கரடி குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தில் புகுந்து அங்கு கடந்த உணவு பண்டங்களை தின்றதோடு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அதனால் அந்த கரடியை அடந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story