கடலில் குளித்த 2 மாணவர்களின் கதி என்ன?
ஆளப்பாடுவில் கடலில் குளித்்த மாணவர்கள் 2 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பாலக்காடு
ஆளப்பாடுவில் கடலில் குளித்்த மாணவர்கள் 2 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலில் குளித்தனர்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஆளப்பாடு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கண்ணன் (வயது 16). இதே பகுதியைச் சேர்ந்த சாதத் மகன் இர்பான் (16).
இவர்கள் 2 பேரும் 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் தேர்வில் வெற்றி பெற்றதை ஒட்டி அதை கொண்டாடும் விதத்தில் இவர்கள் மாணவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் தனது 6 நண்பர்களுடன் ஆளபாடு பகுதியில் உள்ள கடலில் குளித்து கொண்டு இருந்தார்கள்.
மாணவர்கள் மாயம்
அப்போது சிறிது நேரத்தில் கண்ணன், இர்பான் ஆகிய 2 பேரையும் காணவில்லை. அவர்கள் கடலில் குளித்தபோது திடீரென மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவர்கள் 2 பேரையும் தேடினார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடோடி வந்து அவர்களை தேடினார்கள்.
மேலும் இதுபற்றி அறிந்ததும் காயம்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடலில் மாயமான மாணவர்களை தேடினார்கள். ஆனால் இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
கதி என்ன?
நேற்று காலை மீண்டும் மாணவர்களை தேடும் பணி நடந்தது. இந்தப்பணி மாலை வரை நீடித்தது. ஆனால் அவர்களை கண்டு பிடிக்கமுடியவில்லை. மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் அங்கு வந்து சோகமாக நின்றபடி கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தனர்.
கடலில் குளித்த மாணவர்களின் கதி என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story