எல்லையோர கிராமங்களில் தடுப்பூசி போடுவது அதிகரிப்பு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எல்லையோர கிராமங்களில் தடுப்பூசி போடுவது அதிகரித்து உள்ளது.
கிணத்துக்கடவு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எல்லையோர கிராமங்களில் தடுப்பூசி போடுவது அதிகரித்து உள்ளது.
கிராம மக்கள் ஆர்வம்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கேரள எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்ட பகுதியில் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதுபோன்று அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்பகவுண்டனூர், சட்டக்கல்புதூர், முத்துக்கவுண்டனூர், பாலார்பதி, ரங்கேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இவர்களுக்கு சொக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை போட கிராம மக்கள் காலை யிலேயே நீண்ட வரிசையில் காத்து நின்று டோக்கன் பெற்று தடுப்பூசி போட்டுச்செல்கிறார்கள்.
1,100 பேர்
கடந்த 2 நாட்களில் மட்டும் 1100 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டு உள்ளது. அதுபோன்று தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதை பொருத்து அனைவருக்கும் போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வால்பாறை பகுதியில் தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வால்பாறை நகர் பகுதியை சேர்ந்தவர்களுககு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், எஸ்டேட் பகுதியில் உள்ளவர்களுக்கு அந்தந்த எஸ்டேட்களிலும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
வால்பாறை
எனவே வால்பாறை பகுதியில் இதுவரை தடுப்பூசி போடாதவர் கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வட்டார மருத்துவ அதிகாரி பாபுலட்சுமண் கேட்டு கொண்டு உள்ளார்.
வால்பாறை பகுதியில் இதுவரை 26,570 பேர் தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Related Tags :
Next Story