அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 17 Aug 2021 11:04 PM IST (Updated: 17 Aug 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வால்பாறை

ஓணம் பண்டிகையையொட்டி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி 

வால்பாறை அருகே உள்ள தமிழக-கேரள எல்லை பகுதியில் சாலக்குடி என்ற இடத்தில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த சுற்றுலா மையத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவார்கள். 

கொரோனா பரவல் காரணமாக இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல  தடைவிதிக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் வருகிற 21-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் அங்கு ஒருவாரத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

இங்கு  கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் ஓணம் பண்டிகையொட்டி விடுமுறை அறிவித்து உள்ளதால், அதிரப் பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இங்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சமூக இடைவெளிவிட்டு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. 

மகிழ்ச்சி 

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இங்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அத்துடன் அவர்கள் மகிழ்ச்சியுடன் நீர்வீழ்ச்சி பகுதியில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து செல்கிறார்கள். 

மேலும் அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story