வெள்ளகோவில் அருகே நூல்மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதமானது.

வெள்ளகோவில் அருகே நூல்மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் எந்திரங்கள்  எரிந்து சேதமானது.
x
தினத்தந்தி 17 Aug 2021 11:14 PM IST (Updated: 17 Aug 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே நூல்மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதமானது.

வெள்ளகோவில், 
வெள்ளகோவில் அருகே நூல்மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் எந்திரங்கள்  எரிந்து சேதமானது.
இந்த விபத்து குறித்து கூறப்படுவதாவது:-
தீவிபத்து
வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலத்தில், வெள்ளகோவில் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது49) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக நூல் மில் நடத்தி வருகின்றார். நேற்று காலை நூல் மில் எந்திரத்தில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனே ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தனசேகர், வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்
 இதனால் ரூ.40 லட்சம் மதிப்பிலான 10 டன் பஞ்சு மற்றும் நூல் மில் எந்திரங்கரங்கள், மில் கட்டிடம் அதன் மேற்கூரை எரிந்து நாசமாகி விட்டது.
 தீ விபத்தின் போது 16  ஊழியர்கள்  வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த தீ விபத்தில்  ஊழியர்கள் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

Next Story