உளுந்தூர்பேட்டை அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உளுந்தூர்பேட்டை
பெண் தொழிலாளி
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் தக்கா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா(வயது 47). கூலி தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை தனது வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் திடீரென பாத்திமாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த பாத்திமா திருடன் திருடன் என கூச்சலிட்டார்.
போலீசார் விசாரணை
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் 2 மர்மநபர்களும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story