ஆட்டோ டிரைவரை கொலை செய்த 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
திருச்சியில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.
திருச்சி, ஆக.18-

இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஆட்டோ டிரைவர்
திருச்சி தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாத்துரைமகன் பிரபாகரன் (வயது 23). ஆட்டோ டிரைவரான இவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த சேகரின் மகன் ராஜா (32) மதுவாங்கித்தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, அவரை பிரபாகரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி பிரபாகரன் புதுமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜா தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (26), பாண்டியராஜன் (26) ஆகியோருடன் அங்கு சென்று முன்விரோதம் காரணமாக பிரபாகரனுடன் தகராறு செய்தார்.
வெட்டிக்கொலை
பின்னர் தாங்கள் கொண்டு வந்த அரிவாள் மற்றும் வாளால் பிரபாகரனை சரமாரியாக வெட்டினார்கள். இதை தடுக்க வந்த பிரபாகரனின் தந்தை அண்ணாத்துரைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இதுகுறித்து பிரபாகரனின் தந்தை அண்ணாத்துரை கொடுத்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், இதுதொடர்பாக ராஜா, தினேஷ்குமார், பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஜெயக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 42 சான்று ஆவணங்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2 அரிவாள், ஒரு வாள் ஆகியவற்றை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்தவழக்கில் சாட்சி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா, தினேஷ்குமார், பாண்டியராஜன் ஆகிய 3 பேருக்கும் பிரபாகரனை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், அண்ணாத்துரையை அரிவாளால் வெட்டிய குற்றத்துக்காக தினேஷ்குமாருக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆர்.வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.
மேலும் இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து போலீசாரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டினார்.

Related Tags :
Next Story