தேவகோட்டை,
தேவகோட்டை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து சாந்தி மஹாலில் ரத்த தான முகாமை நடத்தியது. முகாமிற்கு த.மு.மு.க தலைவர் ஷேட் முகமது தலைமை தாங்கினார்.மாநிலச் செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார்.தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், நகர ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், திமுக நகர செயலாளர் பாலமுருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மீரா உசேன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை நகர (கிழக்கு) தலைவர் சஞ்சய் ஆகியோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி டாக்டர் அருள்தாஸ் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தங்களை சேகரித்தனர்.தேவகோட்டை அரசு பொதுமருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் செங்கதிர், நகராட்சி ஆணையாளர் மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 100 பேர் ரத்த தானம் வழங்கினர்.