தோழிக்கு அனுப்புவதாக நினைத்து அந்தரங்க தகவல்கள், படங்களை அனுப்பி ஏமாந்த பெண்கள்


தோழிக்கு அனுப்புவதாக நினைத்து அந்தரங்க தகவல்கள், படங்களை அனுப்பி ஏமாந்த பெண்கள்
x
தினத்தந்தி 18 Aug 2021 12:51 AM IST (Updated: 18 Aug 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

தோழிக்கு அனுப்புவதாக நினைத்து அந்தரங்க தகவல்கள்-படங்களை அனுப்பி பெண்கள் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் ராமநாதபுரம் போலீசில் வாலிபர் சிக்கினார்.

ராமநாதபுரம்,

தோழிக்கு அனுப்புவதாக நினைத்து அந்தரங்க தகவல்கள்-படங்களை அனுப்பி பெண்கள் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் ராமநாதபுரம் போலீசில் வாலிபர் சிக்கினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் போல வாட்ஸ்-அப்பில் தகவல்

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு, அவருடைய தோழி அனுப்புவது போல் வாட்ஸ்-அப்பில் வாலிபர் ஒருவர் தகவல் அனுப்பி  உள்ளார்.
அந்த பெண்ணின் மூலம் அவருடைய மற்ற தோழிகளின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்ட நபர், அவர்களிடமும் தோழிகள் அனுப்புவது போல இரவு நேரங்களில் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டார். அப்போது சில பெண்கள் தங்களின் குடும்ப கஷ்டங்கள், அந்தரங்க பிரச்சினைகளை வாட்ஸ்-அப் தகவல்களாக தோழி என நினைத்து அந்த நபரிடம் பகிர்ந்துள்ளனர். மேலும் அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

மிரட்டல்

இந்தநிலையில் அந்த நபர் ஒரு பெண்ணிடம் திருமணமாகி விட்டதா? என்று தகவல் அனுப்பி உள்ளார். ஒரே தெருவில் இருக்கிறோம் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பது உனக்கு தெரியாதா? என்று அந்த பெண் பதில் அனுப்பி கேட்டுள்ளார்.
மேலும் அந்த பெண் உஷார் அடைந்து, தோழி பெயரில் வரும் வாட்ஸ்-அப் தகவல்கள் குறித்து விசாரிக்க தொடங்கினார்.
உடனே எந்த ேதாழி பெயரில் தகவல் வந்ததோ, அவரை தொடர்பு கொண்டு பேசியதுடன், அவர் பெயரில் வந்த வாட்ஸ்-அப் தகவல்களையும் காண்பித்துள்ளார்.. மேலும் தனது மற்ற தோழிகளையும் உஷார்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பெண் பழகுவது போல் ராமநாதபுரம் பெண்களிடம் தகவல் அனுப்பி பழகியவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேலபுழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பீம்ராவ் (35) என தெரியவந்தது. தன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை அறிந்த பீம்ராவ் செல்போனில் உள்ள தகவல்களை அழித்துள்ளார். மேலும் யாருக்கெல்லாம் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி இருந்தாரோ, அந்த, பெண்களை தொடர்பு கொண்டு போலீசுக்கு சென்றால், சேகரித்து வைத்துள்ள உங்களின் அந்தரங்க, ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

வாலிபர் கைது

இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையிலான போலீசார் செங்கம் பகுதிக்கு விரைந்து சென்று பீம்ராவை கைது செய்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இவருக்கு திருமணமாகி முதல்மனைவி திவ்யா பிரிந்து சென்ற நிலையில் 2-வதாக ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கைதான பீம்ராவை ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செல்போன் செயலியில் எச்சரிக்கை
பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களது ேதாழியாக ஆண் ஒருவர் பழகி, அவர்களது அந்தரங்க தகவல்களை சேகரித்தது நடந்தது எப்படி? என்பது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் கூறியதாவது:-
கைதான வாலிபர் பீம்ராவ் செல்போனில் “கேர்ள் பிரண்ட் சர்ச்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் மூலம் சில பெண்களின் எண்களை தேடி எடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். பொதுவாக இந்த செயலியை டவுன்லோடு செய்ததும் அவரவர் செல்போனில் உள்ள எண்களையும், காலரி விவரங்களையும் அனுமதிக்கலாமா? என்று கேட்கும். அதற்கு அனுமதித்ததும் செல்போனில் உள்ள அனைத்து விவரங்களும் அந்த செயலியால் எடுக்கப்பட்டு விடுகிறது. ஒருவர் அந்த செயலியை டவுன்லோடு செய்துவிட்டால் அந்த செயலியை வைத்துள்ள அனைவரின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள விவரங்கள் படங்கள், வீடியோக்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்பவருக்கு சென்றுவிடுகிறது.
எனவே செல்போன் ஆன்ட்ராய்டு செயலியில் இலவசமாக கிடைக்கும் செயலியை பதிவிறக்கம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். தங்களின் விவரங்கள், அந்தரங்க விஷயங்கள் தங்கள் செல்போனில் ்தானே உள்ளது என்று நினைத்தால் பீம்ராவ் போன்ற ஆசாமிகளின் மோசடியில் பெண்கள் சிக்க நேரிடும். எனவே பெண்கள் மட்டுமில்ல அனைவரும் இதுபோன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் தெரிவி்த்தனர்.

Next Story