நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றுவதை பா.ஜ.க. தவிர்க்க வேண்டும்-மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
விருதுநகர்
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
வருத்தமளிக்கிறது
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளர். இந்த நிலைமை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் வருத்தமளிக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்படும் சட்டங்கள் தான் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் தவிர்க்கப்படுகிறது. மேலும் பாராளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் பெற்ற பிறகு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களும் அதனை ஏற்றுக் கொள்கின்றன. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்த ஆளுங்கட்சி தான் அதற்கான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அவ்வாறு இல்லாமல் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பிடிவாதமாக இருப்பது தவறான வழியை ஏற்படுத்தி சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனை பயன்படுத்தி ஆளுங்கட்சி சட்டங்களை விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
குறைக்கலாம்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சுஷ்மிதாதேவ் போன்றவர்கள் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான எதிர்பார்ப்பில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வேல்யாத்திரை முடிந்தவுடன் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து விடும் என்று கூறினார்கள். ஆனால் நடந்தது தமிழக மக்களுக்கு தெரியும். இதேபோல தமிழகத்தில் தற்போது ஆசீர்வாத யாத்திரை என்று தொடங்கியுள்ளனர். இதனாலும் பலனிருக்க போவதில்லை. பட்டியல் இன மக்களை சேர்ந்த 4 பேருக்கு இணை மந்திரி கொடுத்துள்ளனர். இதனால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல் டீசலுக்கு ரூ.9 மட்டுமே வரியாக இருந்தது. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் ரூ.32 வரி விதிக்கப்படுகிறது. ரூ.32 லட்சம் கோடி வருமானம் வருகிறது. இதனை குறைப்பதற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தயாராக இல்லை. வெறும் கூட்டங்கள் நடத்துவது தேவையற்றது. அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெட்ரோல் டீசலுக்கான வரிவிதிப்பில் ரூ.3 குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது. 6 மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.125 உயர்ந்துள்ளது. இதைப்பற்றி பா.ஜ.க. அரசு கவலைப்படுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story