சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சி.ஐ.டியு. ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க பொதுச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, நடராஜன், கந்தையா, சுரேஷ், உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சுடலைராஜ், மாநில குழு உறுப்பினர் பெருமாள், ஒருங்கிணைப்பாளர் வரகுணன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் காமராஜ், அரசு போக்குவரத்து கழக செயலாளர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் செண்பகம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். மாவட்ட பொருளாளர் தேவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story