ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2021 1:09 AM IST (Updated: 18 Aug 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகாசி
விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் இருளாண்டி தலைமை தாங்கினார். 
நகர செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். 
மாவட்ட தலைவர் மகேந்திரகுமார் தொடக்க உரையாற்றினார். 
மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிமணி ஆர்ப்பாட் டத்தை விளக்கி பேசினார். முடிவில் நகர பொருளாளர் மோகன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருந்ததை போல தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Next Story