வங்கியை பொதுமக்கள் முற்றுகை
தெற்கு விஜயநாராயணத்தில் வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
இட்டமொழி:
திசையன்விளை தாலுகா தெற்கு விஜயநாராயணம் மெயின் ரோட்டில் உள்ள வங்கியில், வடக்கு விஜயநாராயணம், பரப்பாடி, மன்னார்புரம், தெற்குவிஜயநாராயணம், மலையன்குடியிருப்பு, சவளைக்காரன்குளம் உள்பட ஏராளமான சுற்றுவட்டார கிராம மக்கள் கணக்கு வைத்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக இந்த வங்கியில் அடிக்கடி இணையதள சேவை பாதிப்பு காரணமாக வரவு, செலவு செய்யமுடியாமல் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் அந்த வங்கியின் அருகிலுள்ள ஏ.டி.எம் எந்திரத்திலும் இணையதள சேவை பாதிப்பு காரணமாக பணம் போடவோ, எடுக்கவோ முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், வங்கியின் முன் கதவை திடீரென பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிக்குள் இருந்த மேலாளர், அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உடனடியாக வங்கி கதவு திறக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story