சிறுமியை அழைத்து சென்ற வாலிபர் கைது


சிறுமியை அழைத்து சென்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2021 2:16 AM IST (Updated: 18 Aug 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை அழைத்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

விராலிமலை
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் உறவினர் வீட்டில் தங்கி விராலிமலை அருகே உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி அன்றைய தினம் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விராலிமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் கந்தர்வகோட்டை தெற்கு வாண்டான் விடுதியை சேர்ந்த செல்வம் மகன் வெங்கடேசன் (வயது 23) என்பவர் சிறுமியை அழைத்து சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் நேற்று தெற்குவாண்டான் விடுதி சென்று சிறுமியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story