கடைகளில் மது விற்ற 4 பேர் கைது
கடைகளில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
விராலிமலை
விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட சித்திரம்பட்டி லஞ்சமேடு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அண்ணாதுரை (வயது 50) மற்றும் மோகன் (43) ஆகியோர் தங்களது பெட்டிக்கடையில் வைத்து மது விற்றபோது போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல லஞ்சமேட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள கறிக்கடை ஒன்றில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (34) மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கெ.பெரியப்பட்டியைச் சேர்ந்த ஜெயராம் (50) ஆகியோர் மது விற்றபோது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :
Next Story