தூக்கு தண்டனை கைதிக்கு மேலும் 7 மாதம் சிறை


தூக்கு தண்டனை கைதிக்கு மேலும் 7 மாதம் சிறை
x
தினத்தந்தி 18 Aug 2021 2:34 AM IST (Updated: 18 Aug 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

தூக்கு தண்டனை கைதிக்கு மேலும் 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜா (வயது 26) என்பவர் கடந்த ஆண்டு ஏம்பல் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தபோது அங்கிருந்து தப்பித்துச் சென்றார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீதான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் தப்பி ஓடிய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாவிற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 7 மாதம் சிறை தண்டனை விதித்து நீதித்துறை நடுவர் அறிவு நேற்று தீர்ப்பு அளித்தார்.


Next Story