மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த அ.தி.மு.க. நிர்வாகி கைது


மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த அ.தி.மு.க. நிர்வாகி கைது
x
தினத்தந்தி 18 Aug 2021 2:56 AM IST (Updated: 18 Aug 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

வி.கைகாட்டி:

பாலியல் பலாத்காரம்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த மண்ணுழி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 60). இவர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராக உள்ளார். இவர், 27 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது.
கைது
இதையடுத்து அந்த பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் விசாரணை நடத்தினார். மேலும் திருமானூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த தியாகராஜனை பிடித்து கைது செய்து, அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story