கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி தலைவர் மனு


கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி தலைவர் மனு
x
தினத்தந்தி 18 Aug 2021 2:56 AM IST (Updated: 18 Aug 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

சமுதாய விலக்கு செய்வதாக அறிவித்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி தலைவர் மனு அளித்துள்ளார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பிரபு. வக்கீலான இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-
வி.களத்தூர் ராயப்பா நகரை சேர்ந்த சிலர் கட்டப்பஞ்சாயத்து நடத்தி என்னையும், எனது குடும்பத்தினரையும் சமுதாய விலக்கு செய்வதாக அறிவித்து உள்ளனர். மேலும் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். எனவே கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story