2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 18 Aug 2021 2:57 AM IST (Updated: 18 Aug 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

7 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,617 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11,313 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 78 பேரில் 17 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 226 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு ஓரிரு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது உயிரிழப்பு வெகுவாக குறைந்துவிட்டது.
தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 483 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 21 ஆயிரத்து 47 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 1,404 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story