பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கோவில் கீழவீதி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை ஆள் நுழைவுத்தொட்டி நிரம்பி கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்தி முழுமையாக சீரமைக்கக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மோடிகண்ணன் தலைமை தாங்கினார்.
இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கோவில் கீழவீதி பகுதியில் கடந்த ஓராண்டிற்கு மேலாக பாதாள சாக்கடை ஆள் நுழைவுத் தொட்டி நிரம்பி வழிந்து சாலையில் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்தி முழுமையாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதில் பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் குருசங்கர், நகர செயலாளர் கார்த்திக், பொருளாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story