தென்மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தூத்துக்குடியில், கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

தென்மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்   தூத்துக்குடியில், கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
x

தென்மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடியில் நேற்று கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி:
தென்மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடியில் நேற்று கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வு கூட்டம்
நெல்லை சரகத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் ஆய்வு நடத்தினார்.
இந்த மாவட்டங்களில் ரவுடிகள் நடமாட்டத்தை ஒடுக்க எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். மேலும், கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி, இம்மானுவேல் சேகரன் குருபூஜை, ஒண்டிவீரன் ஜெயந்தி ஆகிய நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், மதுரை தென்மண்டல ஐ.ஜி. அன்பு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, நெல்லை மாநகர ஆணையர் செந்தாமரைக்கண்ணன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயக்குமார் (தூத்துக்குடி), மணிவண்ணன் (நெல்லை), கிருஷ்ணராஜ் (தென்காசி), பத்ரிநாராயணன் (கன்னியாகுமரி), நெல்லை மாநகர துணை ஆணையர்கள் டி.சுரேஷ்குமார் (சட்டம்-ஒழுங்கு), கே.சுரேஷ்குமார் (குற்றப்பிரிவு) மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story