தூத்துக்குடி உப்பாற்று ஓடை கரை பகுதியில் ரூ.40 லட்சம் செலவில் கரை பலப்படுத்தும் பணி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு


தூத்துக்குடி உப்பாற்று ஓடை கரை பகுதியில் ரூ.40 லட்சம் செலவில் கரை பலப்படுத்தும் பணி  மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்  ஆய்வு
x
தினத்தந்தி 18 Aug 2021 5:38 PM IST (Updated: 18 Aug 2021 5:38 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி உப்பாற்று ஓடை கரை பகுதியில் ரூ.40 லட்சம் செலவில் கரை பலப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி உப்பாற்று ஓடை பகுதியில் ரூ.40 லட்சம் செலவில் கரை பலப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
உப்பாற்று ஓடை
தூத்துக்குடி அத்திமரப்பட்டி, ஜே.எஸ்.நகர், வீரநாயக்கன்தட்டு ஆகிய பகுதிகளில் உள்ள உப்பாத்து ஓடையில் சமூக பொறுப்பு நிதியின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட கரையை உயர்த்தி, அகலப்படுத்தி மற்றும் பலப்படுத்தும் பணி, தற்காலிகமாக கரை பகுதியில் வடிகால் அமைத்து தண்ணீரை ஓடைக்கு கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நிவர்த்தி செய்யப்படும்
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன் அத்திமரப்பட்டி, ஜே.எஸ்.நகர், வீரநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உப்பாத்து ஓடையின் கரையை உயர்த்தி, அகலப்படுத்தி, பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று கோரம்பள்ளம் நீர்வள ஆதார அமைப்பு மூலம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 1.2. கிலோ மீட்டர் தூரத்துக்கு கரையை உயர்த்தி, அகலப்படுத்தி மற்றும் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உப்பாத்து ஓடையின் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதால் அத்திமரப்பட்டி, ஜே.எஸ்.நகர், வீரநாயக்கன்பட்டி பகுதிகளுக்குள் மழை காலங்களில் ஊருக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கப்படும். மேலும், தற்காலிகமாக கரை பகுதியில் அமைக்கப்படும் வடிகால் மூலம் அதிக வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஊருக்குள் தண்ணீர் செல்லாமலும், கரைகள் சேதம் அடையாமலும் தடுக்கப்படும். இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜன், ரத்தினக்குமார், தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story