மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்: கல்லூரி மாணவர் பலி டிரைவர் தப்பி ஓட்டம்


மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்: கல்லூரி மாணவர் பலி டிரைவர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2021 6:13 PM IST (Updated: 18 Aug 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள செருகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் பசிலன் (வயது19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று காலை பசிலன் தனது தாயை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கடகம்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். 

அங்கு தனது தாயை விட்டு விட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தார். கும்பகோணம்- பூந்தோட்டம் சாலையில் சென்ற போது எதிரே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பசிலன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பசிலன் உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேரளம் போலீசார் பசிலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். 

Next Story