தனி நல வாரியம் அமைக்க கோரி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தனி நல வாரியம் அமைக்க கோரி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2021 6:49 PM IST (Updated: 18 Aug 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் தனி நல வாரியம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவாரூர்,

ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்து வீட்டில் இருந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் நபி தலைமை தாங்கினார். சி.ஐ..டி.யூ. மாநில துணைத்தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட செயலாளர் அனிபா, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமுல்படுத்த கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story