இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்


இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Aug 2021 7:29 PM IST (Updated: 18 Aug 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தேனி:

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதாக மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களை சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். 

அதன்பேரில் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடு நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த திருமண ஏற்பாட்டை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஆஜர்படுத்தினர்.

 சிறுமியின் பெற்றோருக்கு குழந்தைகள் நலக்குழுவினர் அறிவுரை கூறினர். சிறுமியின் விருப்பத்தின் பேரில் அவரை தற்காலிகமாக தேனி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்க குழந்தைகள் நலக்குழுவினர் நடவடிக்கை எடுத்தனர். 

அதன்பேரில் அந்த சிறுமி, குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

Next Story