தூத்துக்குடி அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு வலைவீச்சு


தூத்துக்குடி அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Aug 2021 8:05 PM IST (Updated: 18 Aug 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலித் தொழிலாளி
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சர்ச் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி தங்கரத்தினம் (வயது 55). கூலித் தொழிலாளி.
இவர் புதுக்கோட்டை யாதவர் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென தங்கரத்தினம் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
தங்க சங்கிலி பறிப்பு
இதனால் தங்கரத்தினம் சத்தம் போட்டு உள்ளார். அதே நேரத்தில் தங்கசங்கிலியை பலமாக பிடித்துக் கொண்டாராம். 
இதனால் மர்மநபர் பலம் கொண்டு இழுத்து உள்ளார். இதில் தங்க சங்கிலி இரண்டு துண்டாக அறுந்தது. இதில் ஒருபவுன் தங்க சங்கிலியுடன் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து, தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.

Next Story