திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி
x
தினத்தந்தி 18 Aug 2021 8:20 PM IST (Updated: 18 Aug 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாத உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி கிடைத்துள்ளது. மேலும் 1¼ கிலோ தங்கமும் கிடைத்தது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாத உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி கிடைத்துள்ளது. மேலும் 1¼ கிலோ தங்கமும் கிடைத்தது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்படுகின்றன. இந்த மாதத்தில் உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி தலைமையில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில், உதவி ஆணையர் செல்வராஜ், குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் உதவி ஆணையர் கண்ணதாசன், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் முருகன், இசக்கிசெல்வம், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி ஓதுவார், மோகன், சுப்பிரமணியன், கருப்பன், சிவகாசி பதினென்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
ரூ.1.76 கோடி
நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 73 லட்சத்து 45 ஆயிரத்து 160-ம், தற்காலிக உண்டியல்கள் மூலம் ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 319-ம் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 76 லட்சத்து 19 ஆயிரத்து 479 கிடைத்தது.
அதேபோல், தங்கம் 1,250 கிராம், வெள்ளி 30,350 கிராம், 261 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் கிடைத்தது.

Next Story