தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல் 2 டிரைவர்கள் காயம்


தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல் 2 டிரைவர்கள் காயம்
x
தினத்தந்தி 18 Aug 2021 9:01 PM IST (Updated: 18 Aug 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதியதில் 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி:
கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் வழியாக நேற்று மாலை வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் மகேஷ் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக அதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் (28) என்பவர் வந்தார். தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே  லாரி வந்தபோது லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து 2 டிரைவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story