விழுப்புரம், மயிலம் அருகே கார், மோட்டார் சைக்கிளில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்


விழுப்புரம், மயிலம் அருகே கார், மோட்டார் சைக்கிளில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Aug 2021 10:17 PM IST (Updated: 18 Aug 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

3 பேர் கைது

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 350 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர், புதுச்சேரி வணரப்பேட்டை ரோயே டாக்டர் தோப்பு பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் லோகேஸ்வரன் (வயது 22) என்பதும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக சேலத்திற்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து லோகேஸ்வரனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சமாகும். இதேபோல் மயிலம் அருகே மோட்டார் சைக்கிளில் 85 மதுபாட்டில்களை கடத்தி வந்த வானூரை சேர்ந்த சதீஷ்குமார்(19), காட்ராம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி(20) ஆகியோரை மயிலம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 85 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story