மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்
மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், திருப்பூர் வடக்கு மாவட்ட பூசாரி சமூக நல சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
சிறிய, சிறிய கோவில்களில் பூசாரிகளாக பணியாற்றி வருகிறோம். கொரோனா பாதிப்பு 2 ஆண்டுகளாக இருந்து வருவதால் பக்தர்கள் வராததால் போதிய வருமானம் இல்லை. பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசம் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் எங்களுக்கு இது வழங்கப்படவில்லை. அறநிலையத்துறை செயல்படும் கோவில்களில் உள்ள பூசாரிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே மற்ற கோவில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். இதுபோல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story