விக்கிரவாண்டி அருகே கேட்பாரற்று கிடந்த 25 டெட்டனேட்டர்கள் போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி அருகே சாலையோரம் கேட்பாரற்று கிடந்த 25 டெட்டனேட்டர்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விக்கிரவாண்டி,
டெட்டனேட்டர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 2 மணியளவில் பெரியதச்சூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பிள்ளையார் கோவில் எதிரே எண்ணாயிரம் செல்லும் சாலையோரத்தில் பாலித்தீன் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதைபார்த்து சந்தேகமடைந்த போலீசார், அந்த பையை திறந்து பார்த்தபோது, கிணறு வெட்ட பயன்படுத்தப்படும் 25 டெட்டனேட்டர் இருந்தது தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து கைப்பற்றப் பட்ட அந்த டெட்டனேட்டர்களை போலீசாா் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் செஞ்சியில் தனியாருக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெட்டனேட்டர்களை சாலையோரத்தில் போட்டுச் சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story