புனித லூர்து அன்னை ஆலய 100-வது ஆண்டு விழா


புனித லூர்து அன்னை ஆலய 100-வது ஆண்டு விழா
x
தினத்தந்தி 18 Aug 2021 11:47 PM IST (Updated: 18 Aug 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலய 100-வது ஆண்டு விழா நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலய 100-வது ஆண்டு விழா நடைபெற்றது. 
புனித லூர்து அன்னை ஆலயம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற புனித லூர்து அன்னை ஆலய பங்கு மன்னார்குடியிலிருந்து  தனி பங்காக பிரிக்கப்பட்டு தற்போது 99 ஆண்டுகள் முடிவு பெற்று 100-வது  ஆண்டு தொடங்கி உள்ளது. இதை கொண்டாடும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கொேரானா பரவலை கருத்தில் கொண்டு விழாைவ எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் ஆலயத்தில் நூற்றாண்டு கொடி ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மாலை அன்னையின் திருஉருவ சிறியதேர் ஆலய வளாகத்தை சுற்றி எடுத்து செல்லப்பட்டது. 
திருப்பலி
வேளாங்கண்ணி அதிபர் பிரபாகர் தலைமையில் 9 குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர். விழாவில் மக்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பங்கேற்றனர்.  விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் பிரிட்டோ, உதவி பங்கு தந்தை தாமஸ், பங்கு மன்ற செயலாளர் டாக்டர் சகாயம், மற்றும் இளைய இயக்கத்தினர் செய்திருந்தனர்.

Next Story