ஆகஸ்ட் 18: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


ஆகஸ்ட் 18: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 18 Aug 2021 11:58 PM IST (Updated: 18 Aug 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் மேலும் 1,797 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் மேலும் 1,797 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 94 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 1,908 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 39 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழ்நாட்டில் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் - 15
செங்கல்பட்டு - 108
சென்னை - 198
கோவை - 210
கடலூர் - 55
தர்மபுரி - 23
திண்டுக்கல் - 13
ஈரோடு - 156
கள்ளக்குறிச்சி - 29
காஞ்சிபுரம் - 42
கன்னியாகுமரி - 27
கரூர் - 18
கிருஷ்ணகிரி - 30
மதுரை - 16
மயிலாடுதுறை - 23
நாகை - 36
நாமக்கல் - 54
நீலகிரி - 34
பெரம்பலூர் - 6
புதுக்கோட்டை - 32
ராமநாதபுரம் - 6
ராணிப்பேட்டை - 23
சேலம் - 103
சிவகங்கை - 20
தென்காசி - 7
தஞ்சாவூர் - 109
தேனி - 14
திருப்பத்தூர் - 7
திருவள்ளூர் - 67
திருவண்ணாமலை - 33
திருவாரூர் - 39
தூத்துக்குடி - 13
திருநெல்வேலி - 15
திருப்பூர் - 89
திருச்சி - 59
வேலூர் - 28
விழுப்புரம் - 35
விருதுநகர் - 5

மொத்தம் - 1,797

Next Story