டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்


டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 19 Aug 2021 12:04 AM IST (Updated: 19 Aug 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்
வேலூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மது விற்பனை

வேலூர் காகிதப்பட்டறையில் எலைட் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி டாஸ்மாக் அதிகாரிகள் திடீரென டாஸ்மாக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாடிக்கையாளர்களுக்கு உரிய விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் கடையில் விற்கப்பட்ட மதுபானம் அதற்கு வசூலான பணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தை விட கூடுதல் தொகையாக ரூ.26 ஆயிரம் கடையில் இருந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த பணம் கூடுதல் விலைக்கு மதுவிற்கப்பட்டு பெறப்பட்டு பணமா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் கடையில் வேலை செய்து வந்த மேற்பார்வையாளர் சண்முகம், விற்பனையாளர்கள் உதயகுமார், பிரகாஷ், பாலாஜி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிகாரிகள் ஆய்வின் போது கடையில் இருந்து மதுவிற்பனை செய்யப்பட்ட பணத்தை விட கூடுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் அதிகவிலைக்கு மதுவிற்பனை செய்து பெறப்பட்டதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் விற்பனைக்கு மது விற்பனை செய்தது தெரியவந்தால் அவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story