துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருணாச்சலம் தஞ்சாவூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் நமச்சிவாயம் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூரில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ள சுப்பிரமணியம், பயிற்சி முடித்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story