திருமணத்துக்கு 4 நாட்களே இருக்கும் நிலையில் மணமகன் மீது ‘ஆசிட்’ வீச்சு
திருமணம் நடக்க இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் மணமகன் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆம்பூர்,
திருமணம் நடக்க இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் மணமகன் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஷூ கம்ெபனி ஊழியர்
ஆம்பூரில் உள்ள ஆயிஷாபீ பகுதியைச் சேர்ந்தவர் ஷமில் அஹமத் (வயது 27). இவர், ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 23-ந்தேதி திருமணம் நடக்க உள்ளது.
ஷமில்அஹமத் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்குப் புறப்பட்டார். வழியில் தனது நண்பர்களை பார்க்க, அதே பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அருகில் வந்து திடீரென அவர் மீது ஆசிட்டை வீசினர்.
போலீஸ் வலைவீச்சு
அதில் மணமகன் ஷமில் அஹமத் முகத்தில் ஆசிட் தெளித்து பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்தாா். அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ஆசிட் வீசிய மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள், அவர்கள் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். அங்கிருந்தவர்கள் ஷமில் அஹமத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளித்து, வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து ஆசிட் வீசிய மர்ம நபர்கள் யார், எதற்காக ஆசிட் வீசினார்கள், திருமணம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினையா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பரபரப்பு
திருமணம் நடக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மணமகன் மீது ஆசிட் வீசிய சம்பவம் ஆம்பூரில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story