மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 19 Aug 2021 12:55 AM IST (Updated: 19 Aug 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொல்லை 
விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கழுகு என்ற மருதராஜ் (வயது30), சங்கரநாராயணன் (30).  இவர்கள் 2 பேரும் 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புதுப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 
17 ஆண்டு சிறை தண்டனை 
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி தனசேகரன் விசாரித்து தீர்ப்பளித்தார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சங்கரநாராயணனுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், மாணவியை மிரட்டிய மருதுராஜூவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story