புகையிலை கடத்தியவர் கைது
புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தச்சநல்லூர் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பேட்டை சாஸ்திரி நகரை சேர்ந்த ரதிஷ்குமார் என்பதும், ரூ.18 ஆயிரம் மதிப்புடைய 1,700 சிறிய புகையிலை பொட்டலங்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொட்டலங்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், இவர் வெளிமாநிலத்தில் இருந்து புகையிலையை கூரியரில் அனுப்ப சொல்லி கூரியர் அலுவலகத்தில் இருந்து எடுத்துச்சென்று விற்பனை செய்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story