ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2021 1:53 AM IST (Updated: 19 Aug 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

பெரம்பலூர்
 பெரம்பலூர் வட்ட தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மின்வாரிய வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பஷீர் வட்ட செயலாளர் ராஜகுமாரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை வாரியமே நடத்திட உத்தரவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மின்வாரியங்களை தனியார் மயமாக்கும் திட்டங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story