ரவுடியிசம், கஞ்சா போன்ற குற்றச்செயல்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை புதிய போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் பேட்டி
ராணிப்ேபட்டை மாவட்டத்தில் ரவுடியிசம், கஞ்சா போன்ற குற்றச்செயல்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என புதிய போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கூறினார்.
ராணிப்ேபட்டை
ராணிப்ேபட்டை மாவட்டத்தில் ரவுடியிசம், கஞ்சா போன்ற குற்றச்செயல்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என புதிய போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் சூப்பிரண்டாக தீபாசத்யன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர், நிருபர்களிடம் கூறியதாவது
கடும் நடவடிக்கை
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சினை உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ரவுடியிசம், கஞ்சா, குற்றச் செயல்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளது. இதைக் கண்டறிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை உயர் அதிகாரிகள் அளிக்கும் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொதுமக்கள் போலீசாருக்கு கொடுக்கும் ரகசிய தகவல்களை பேணிக் காத்து, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதியில் போலீசாரை வைத்து போக்குவரத்துச் சீர் செய்யப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பூரணி (ராணிப்பேட்டை), புகழேந்தி கணேசன் (அரக்கோணம்) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.
பொறுப்பேற்ற சிறிது காலத்திேலயே மாற்றம்
ராணிப்பேட்டை மாவட்டம் உதயமாகியபோது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டார். அவர், 18.11.19-ந்தேதி முதல் 18.2.21-ந்தேதி வரை பணியாற்றினார். பின்னர் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பின் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 6 மாதங்களில் டாக்டர் சிவக்குமார், ஓம்பிரகாஷ் மீனா, தேஷ்முக் சேகர்சஞ்சய் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களும் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக தீபாசத்யன் பொறுப்பேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story